Sunday, February 05, 2006

பாதை

மார்கழி காலையில்
பனி சூழ்ந்த வேளையில்
சூரியன் எட்டிப் பார்கும் சமயத்தில்
கண்கள் மூடி நடந்தேன்
என் பருவ நிலையில், நினைவில்

காற்று, மெல்ல கண்களை வருடியது......
அதன் ஓசை காதுகளில் பாய்ந்தது....
அதன் மென்மை உடலை சிலிர்க்கவைதது
என் மனதையும் உதட்டையும் வருடியது...................மென்மையாக

மழைதுளி என்மேல் விழ
என் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டது

திடுக்கிட்டு விழித்தேன்
வந்த பாதையைப் பார்த்தேன்.........

"இறந்த காலம் ஏளனமாய் சிரித்தது"

போகும் பாதையைப் பார்த்தேன்

"விகாரமும்... சிரிப்பும் கலந்த பார்வையோடு என்னை நோக்கியது"

நின்ற இடத்தைப் பார்த்தேன்.........
........"தைரியமாய் வாழ்வை எதிர்னோக்கு" என்றது

என் விழிகளை நிமிர்த்தினேன்.......நம்பிக்கையுடன்

வெளிச்சத்தில் நடந்தேன்..........


.....
தேவி

2 comments:

Karthikeyan said...

Hey,
came across your blog. pretty interesting.....the kavithai was pretty nice...keep up the good work!

C Karthikeyan

Sridevi S said...

10x u karthikeyan